ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை கனடாவிற்கு வருவிப்பதில் தாமதமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொகுதியே இவ்வாறு தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒன்ராரியோவிலேயே பாரிய பிரதிபலிப்புக்கள் ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
இன்றையதினம் ஒன்ராரியோவிற்கு 389ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக 194ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் தற்போதைய நிலையில் அதில் தாமதம் வெகுவாக இருக்கும் என்றும் மே நடுப்பகுதிக்கு பின்னரே அந்த தொகை கிடைக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.