புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆராயவுள்ளது.
அலரி மாளிகையில் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆளும் தரப்பு அரசியல் கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, தேர்தல் முறைமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்த நிலையில், மாகாண சபை தேர்தல் முறைமை மாற்றப்படும் பட்சத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு சம்பந்தமாக இதன்போது தங்களால் விளக்கமளிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.