பாகிஸ்தானில் இருந்து 300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் வைத்து கைப்பற்றியுள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த மீன்பிடிப் படகில் இருந்த போதைப் பொருட்களில் சர்வதேச பெறுமதி, 3,000 கோடி இந்திய ரூபா வரை இருக்கும் என்றும், இந்திய கடற்படை கூறியுள்ளது.
கொச்சியில், இருந்து வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர், சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போதே, 300 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் அதில் இருந்ததைக் கண்டுபிடித்த்துடன், படகில் இருந்து சிறிலங்காவைச் சேர்ந்த ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகு சிறிலங்காவில் சிலாபம் பகுதி பதிவு இலக்கத்தைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.