அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதியான வால்டர் மொண்டேல், தனது 93ஆவது வயதில் காலமானார்.
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு முக்கிய தாராளவாத ஜனநாயகக் குரலான வால்டர் மொண்டேல், செயற்பட்டிருந்தார்
அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக ஜிம்மி கார்ட்டர் பதவி வகித்த போது, 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 42ஆவது துணை ஜனாதிபதியாக வால்டர் மொண்டேல் பதவி வகித்தார்.
இதுதவிர பில் கிளிங்டன் ஜனாதிபதியாக இருந்தபோது 1993ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை வால்டர் மொண்டேல், ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் செயற்பட்டுள்ளார். இந்தநிலையில், வால்டர் மொண்டேலின் மறைவுக்கு அவருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், பராக் ஒபாமா, தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்