ரொறன்ரோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கர்ப்பிணிகளான கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுவது குறித்து, மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குழந்தைப் பேறை எதிர்பார்த்துள்ள தாய்மார், குறிப்பாக திரிபடைந்த கொரோனா தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Mount Sinai மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களில் 30 வீதமானோர் கர்ப்பிணித் தாய்மார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு அலைகளையும் விட அதிகவில் கர்ப்பிணிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.