சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய 27 பேர் ஒன்ராறியோவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 48 சுடுகலன்களும், 7 இலட்சத்து 30 ஆயிரம் டொலர் பணமும், இரண்டரை மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறுவர்களின் உள்ளக விளையாட்டு மையம் ஒன்றில் இருந்தே ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை திட்டம் என்ற பெயரில் 2020ஆம் ஆண்டு கனடிய காவல்துறை, பீல் காவல்துறை, மற்றும் அமெரிக்க போதை தடுப்பு நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ஆம் நாள் ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, கலிபோர்னியா ஆகிய இடங்களில் 50 இடங்களில் ஒரே நேரத்தில் தேடுதல்கள் நடத்தப்பட்டதில், 10 கிலோ கொகைன் (cocaine), எட்டு கிலோ கெடமைன் (ketamine), மூன்று கிலோ ஹெரோயின் மற்றும் இரண்டரை கிலோ ஓபியம் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் யோர்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 27 ஒன்ராறியோ வாசிகள் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 19 பேர் பிராம்டனையும், 4 பேர் ரொறன்ரோவையும், இருவர் வாகனையும் (Vaughan) , Woodstock மற்றும் Caledonஐ சேர்ந்த தலா ஒருவரும் அடங்கியுள்ளனர்.