தமிழகத்தில் ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் தனியார் வாகனங்கள் பயணம் செய்வதற்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படும் என்று காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதையடுத்து வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன





