தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது. கிராமப்புறங்களிலும் தடையின்றி தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு கூடுதலாக 6 இலட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன. விரைவில் 5 இலட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வருகைக்காக காத்திருக்கிறோம்.
தடுப்பூசி வீணாகாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடன், வீணாகும் தடுப்பூசியின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.