மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், நௌபர் மௌலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக, கோகாலை மேல்நீதிமன்றில், சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
நௌபர் மௌலவி, இப்ராஹிம் மௌலவி, மொஹமட் சாஜித், மொஹமட் சாஹிட், சாதிக் அப்துல்லா, சைனுல் ஆப்தீன், மொஹமட் மில்ஹான் ஆகியோருடன் மேலும் 9 பேருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2018 டிசம்பரில் மாவனெல்லை உள்ளிட்ட 6 இடங்களிலுள்ள புத்தர் சிலைகளை உடைத்து இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.