யோர்க் பிராந்தியத்தில் ஐந்து முன்னுரிமை அஞ்சல் குறியீட்டுப் பிரதேசங்களில் உள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதல்முறை தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன் (Vaughan) பகுதியில், L4L, L6A, L4K, L4J, ஆகிய அஞ்சல் குறியீட்டுப் பகுதிகளிலும், மார்க்கம் பகுதியில் L3S அஞ்சல் குறியீட்டுப் பகுதியிலும் உள்ளவர்களுக்கே, இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
யோர்க் பிராந்தியத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி போடத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதிக ஆபத்துப் பிரதேசங்களில் வயது வரம்பில் தளர்வுகள் கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.