காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.
“அறிகுறி தென்பட்டவுடன் பரிசோதனை செய்ததில், இலேசான கொரோனா தொற்று எனக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்,கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக இருங்கள்.” என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்தி விரைவில் குணமடையவும், நல்ல உடல்நலத்திற்காகவும் கடவுளை வேண்டி கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் பல முக்கிய பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது