தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் வீதியில் உள்ள எம்.ஜி.எம். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு குடல் இறக்கம் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அவருக்கு லேப்ராஸ்கோப்’ கருவி மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, அவர் பூரண குணமடைந்தவுடன் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்.