ஈரானின் நடான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்தில் கடந்தவாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பானவர் என, ஒருவரின் பெயரை ஈரானிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
ரெசா கரிமி (Reza Karimi) என்ற நபரே இந்த தாக்குதலுக்கு பொறுப்பு எனவும், வலையமைப்பு ஒன்றில், வெடிப்பு நிகழுவதற்கு முன்னதாக, அவர் ஈரானில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் ஒளிப்படத்துடன் கூடிய தேடப்படும் நபர் அறிவிப்பையும் ஈரானிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இஸ்ரேல் அதனை நிராகரிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.