அந்தமான் தீவுகளில், இன்று நள்ளிரவுக்குப் பின்னர் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்கு 4 நிமிடம் அளவில், இந்த நிலநடுக்கம் அந்தமான் தீவுகளில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கதால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.