கதிரியக்க மூலப்பொருட்களுடன் ஹம்பாந்தோட்டைக்கு வந்த சீன கப்பலை துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக குறித்த கப்பல் நேற்று இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வந்துள்ளதாக தெரியவருகின்றது.
அணு உற்பத்திக்குப் பயன்படும் மூலப்பொருட்களுடன் கூடிய கப்பல் சீனாவுக்குத் திரும்பும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துறைமுகத்துக்குள் வந்துள்ளதாக சிறிலங்கா அணுசக்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கப்பலில் அணு உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருள்கள் இருந்தமை துறைமுக அதிகாரசபைக்குத் தெரியாது என்றும் அணுசக்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்து எந்தப் பொருட்களையும் வெளியேற்ற வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து வெளியிடப்படும் கழிவுப் பொருட்களில் இருந்து சிறிலங்காவிற்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று அணுசக்தி அதிகாரசபையின் தலைவர் தென்னகோன் தெரிவித்துள்ளார்