மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள நகராட்சி மருத்துவமனையில், ஒக்சிஜன் கசிவு காரணமாக, 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
நாசிக்கில் ஜாகிர் ஹூசைன் நகராட்சி மருத்துவமனையில், செயற்கை சுவாச கருவி மற்றும் ஒக்சிஜன் உதவியுடன் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொள்கலனில் இன்று ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நோயாளிகளுக்கு ஒக்சிஜன் கிடைக்காமல் போனதால், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒக்சிஜன் கொள்கலனில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கசிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ள மஹாராஷ்டிரா மாநில அரசு, இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.