சாட் ஜனாதிபதியாக இருந்த இட்ரிஸ் டெபி (Idriss Déby)யின் மகன் நாட்டின் தலைவராக இராணுவத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் ஆட்சியில் இருந்த இட்ரிஸ் டெபி, முன்னரங்கில் கிளர்ச்சியாளர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததை அடுத்து, அவரது மகன் முகமட் இட்ரிஸ் டெபியை (Mahamat Idriss Déby) தற்காலிக ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக சாட் இராணுவம் அறிவித்திருந்தது.
எனினும், இதனை நிராகரித்துள்ள கிளர்ச்சியாளர்கள் சாட் ஒன்றும் முடியாட்சி நாடு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.
ஜெனரல் ககா என்று அழைக்கப்படும், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருந்த முகமட் இட்ரிஸ் டெபி, அடுத்த 18 மாதங்களுக்கு ஆட்சியில் இருப்பார் என்று இராணுவம் கூறியிருந்தது.
எனினும், சாட் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி இறந்தால், சபாநாயகர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாட்டின் தென்பகுதி நோக்கி முன்னேறப் போவதாக சாட் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.