ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவிருந்த பயணங்களை ரத்துச் செய்துள்ளார்.
ஜப்பானிய பிரதமராக அண்மையில் பொறுப்பேற்ற யோஷிஹிடே சுகா, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்தார்.
இதையடுத்து, இந்த மாத இறுதியில் புதுடெல்லிக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தின் போது அவர், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவிருந்தார்.
ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் யோஷிஹிடே சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிலிப்பைன்சுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தையும், அவர் ரத்துச் செய்துள்ளார் என்று ஜப்பானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை அடுத்து, பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் தமது இந்தியப் பயணத்தை ரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.