ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க அரசாங்கம் தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகள் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு சுயாதீனமான முறையில் செயற்பட ஜனாதிபதி உதவியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்