கர்நாடகாவில் கொரோனா நிலைமை கை மீறிபோய் விட்டது என மாநில முதல்வர் எடியூரப்பா மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இரண்டாவது தடவை கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“ஒரு வீட்டில் 3 முதல் 4 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் முகக் கவசம் அணிதல், தொற்று நீக்கி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவைதான் கொரோனாவை எதிர்க்க ஒரே தீர்வு.
கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு நாம் வந்து விட்டோம்.
இனி தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சமூகத்தில் உள்ள அனைவரின் நலனுக்காக மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்