கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்றுடன் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் மற்றும் 11 இடையீட்டு மனுக்களை தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாம் விசாரித்து வருகிறது.
கடந்த 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்றது.
காலை 10 மணி தொடங்கிய இன்றைய விசாரணைகள், இன்று மாலைக்குள், நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தவர்கள், எழுத்து மூலமான ஏதாவது சமர்ப்பணங்கள் இருந்தால், அவற்றை சமர்ப்பிப்பதற்கு நாளை நண்பகல் 12 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.