அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி, சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின இலட்சிய திட்டமான ‘பட்டி மற்றும் வீதி’ திட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண அரசாங்கத்துடன் கடந்த 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சீன அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விக்டோரியா மாகாண கல்வி துறையுடன் கடந்த 1999ஆம் ஆண்டு சிரியாவும் 2004ஆம் ஆண்டில் ஈரானும் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன





