தபால் வாக்குகளை முன்கூட்டியே எண்ணக் கூடாது என அ.தி.மு.க. சார்பில், தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் இந்த மனுவை கையளித்துள்ளார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் நாளாக மே 2-ஆம் நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த நாளில்தான் வாக்குகள் எண்ணப்பட வேண்டுமே தவிர, அதற்கு முன்னதாக எந்தவொரு சூழ்நிலையிலும் தபால் வாக்குகள் எண்ணப்படக் கூடாது.
வாக்கு எண்ணிக்கைக்கு கடந்த காலங்களில் என்ன நடைமுறை மேற்கொள்ளப்பட்டதோ, அதே முறைதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.