தமிழகத்தில் மே 1ஆம் நாள் முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மே 1ஆம் நாள் முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படுவதுடன், பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.