இரண்டாயிரம் ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழீழத்தைத் தர முடியாதெனக் கூறியவர்களே, தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் இறையாண்மையும், தனித்துவம் பாதிக்கப்படும்.
கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத இந்த அரசாங்கம், இப்போது சிறிலங்காவுக்குள் சீனாவின் இராச்சியத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றது.
இந்தியாவின் அழுத்தம் காரணமாவே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது எனவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.