கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி, நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
இதுவரை இல்லாதளவாக நேற்று 3.14 லட்சம் பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
‘கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால், ஊரடங்கு தேவையில்லை என்று பிரதமர் மோடி, கூறியிருந்த நிலையில், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது,
இதையடுத்து, பிரதமர் மோடி நாளை நிலைமையைக் கையாளுவது குறித்த முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார். அத்துடன் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும், அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்