யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபியினை நாளை காலை 7.30 மணி அளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் திறந்து வைக்க இருந்த நிலையில், அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..