ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி Alexei Navalny) சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக, ஆயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நவல்னிக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோவில் பாரிய பேரணிகள் இடம்பெற்றுள்ளதாகவும், ஏனைய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணிகளில் பங்கேற்றுள்ளனர் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவில் 6 ஆயிரம் பேர் உள்ளிட்ட நாடு முழுவதும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர் என்று ரஷ்ய அரசு கூறியுள்ள போதும், இதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன