யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 18 பவுண் தங்க நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் காவல்துறை பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையிலேயெ இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணியே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது.
இந்நிலையில், சந்தேநபர்கள் ஏழு பேரும் யாழ்ப்பாணம் நீதிபதியிடம் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.