மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான எல்லா ஆவணங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
விரைவாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்ட அதிகாரப் பகிர்வு கடப்பாடுகளை சிறிலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,
“தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளுக்குப் பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் கூடிய விரைவில் நடத்தப்படும்.
தேர்தல்களை தாமதிக்கின்ற நோக்கம் எமக்கு கிடையாது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு, சில தொழில்நுட்ப மற்றும் அரசியலமைப்பு சிக்கல்களை உடனடியாக தீர்க்க வேண்டியுள்ளது.
அதனை துரிதமாக மேற்கொள்வதற்கு முயற்சிக்கிறோம். ” என்றும் தெரிவித்துள்ளார்.