தமக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு சிறிலங்கா அரசாங்கத்தின் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தமது உயிருக்கு ஏதேனும் ஆபத்துகள் நேரிட்டால் அதற்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டனர் என்று குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவைச் சேர்ந்த 11 சந்தேக நபர்கள் சட்டமா அதிபரின் பரிந்துரையை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.