அவசியமற்ற அனைத்து பயணங்களும் குறைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தரை மற்றும் வான் எல்லைக் கடப்புகளில் “கடுமையான” நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் (Doug Ford) மற்றும் கியூபெக் முதல்வர் பிராங்கோயிஸ் லிகோல்ட் (Francois Legault) ஆகியோர் பிரதமரிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
உள்வரும் சர்வதேச வான் பயணங்களை மட்டுப்படுத்துமாறும், கனடா- அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்குமாறும், சமஷ்டி அரசிடம் இரண்டு மாகாண முதல்வர்களும் பகிரங்க கடிதம் ஒன்றில் வலியுறுத்தியுள்ளனர்.
எமது மக்களின் உயிர்களைப் காப்பாற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் அவசியம் தேவைப்படுவதாகவும் அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.