வெளியிடங்களில் நடமாடும் மக்களை தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, தவறு செய்து விட்டதாக ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
அந்த கட்டுப்பாடுகளை இயற்றும் போது, தொற்றுப் பரவலைக் குறைக்கும் என நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
“நடமாட்டத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் வேகமாக செயற்பட்டோம், அது மிக வேகமாக இருந்தது.
எளிமையாகச் சொன்னால், நாங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டோம். நாங்கள் தவறு செய்து விட்டோம்” என்றும் முதல்வர் டக் போர்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.