சீன பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான பொருளாதார உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக வரும் 27ஆம் நாள், கொழும்புக்குச் செல்லவுள்ளார்.
எதிர்வரும் 29ஆம் நாள் வரை அவர் கொழும்பில் தங்கிருக்கும் போது, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முக்கியமான உடன்பாடு ஒன்றும் இதன்போது கையெழுத்திடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, சீனப் பாதுகாப்பு அமைச்சரின் வருகையின் போது, கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு ஜேவிபி தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைமுக நகரத்தை சீனாவின் கொலனியாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிராகவே ஜேவிபி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.