டெல்லியில் ஒக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.
அதேநேரம் ஒரு சில மருத்துவ மனைகளில் ஒக்சிஜன் சிலிண்டருடன் வந்தால் தான் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
மத்திய அரசு போதுமான அளவு ஒக்சிஜன் இருப்பதாக கூறுகின்ற போதும் தற்போது பெரும்பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மத்திய சுகாதாரத்துறை நாளாந்த ஒக்சிஜன் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.