குடும்ப இரகசியங்களை தொடர்ந்து வெளியிட்டு செய்துவரும் மேகனால் மீண்டும் இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஹரி, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பிய சிறிது நேரத்திற்குள்ளேயே, சில குடும்ப இரகசியங்கள் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் People பத்திரிகை, மேகன் தன் குழந்தை ஆர்ச்சியுடன் மகாராணியாரிடம் தொலைபேசியில் தனிப்பட்ட விதத்தில் பேசிய தனிப்பட்ட விடயங்களை விவரமாக வெளியிட்டதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்ட குடும்ப விடயங்கள் உடனடியாகவே பத்திரிகைகளில் வெளியானதால் ராஜ குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.