ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவரை விடுவிக்கவும் வலியுறுத்தி ரஷ்யா முழுவதும் நேற்று தொடக்கம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன..
தலைநகர் மொஸ்கோ, விளாடிவோஸ்டாக், சைபீரியாவின் பல நகரங்கள் மற்றும் மத்திய நகரமான விளாடிமிர் உட்பட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 நகரங்களில் நேற்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 804 பேரும், யூரல்ஸ் நகரமான உஃபாவில் 119 பேரும் உட்பட ஆயிரத்து 782பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், மற்ற கைதிகள் போலவே நவல்னியும் நடத்தப்படுவதாகவும், ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமானது என்று ஜனாதிபதி விளாடிமீர் புடின் கண்டனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.