அடுத்த ஆண்டில் 35 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளையும் அதற்கு அடுத்த ஆண்டு 30 மில்லியன் மருந்துகளையும் வழங்க பைசர் நிறுவனம்,இணங்கியுள்ளதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனைய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும், தமது அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து வரும் ஆண்டுகளில் பல பத்து மில்லியன் கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் கனேடிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அத்துடன், 75 வீதமான கனேடியர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் கோடைகாலத்தில் முடக்க நிலையை தவிர்க்க முடியும் என்றும் கனேடிய சமஷ்டி அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.