முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்விஎழுப்பியுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமை குறித்து அவர் கீச்சகத்தில் தமது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், பாராளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர், நண்பர் ரிசாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் “அதிகாலை 3 மணி” க்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலக கேடியை இழுத்து செல்வதை போல், கைது செய்ததன் பின்னுள்ள “ஆவேசம்” என்ன? ராஜபக்ச அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.