அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி உள்ளதால் பேர்த்தில் மூன்று நாள் அவசர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பேர்த் நகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட விடுதி ஒன்றிலிருந்து, சர்வதேச பயணிகளால் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா சென்றவர்கள் மூலமாகவே அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும், அவுஸ்ரேலியாவின் ஏனைய மாகாணங்கள், மேற்கு மாகாணத்துடனான அனைத்து எல்லைகளையும் மூடியுள்ளன.
விரைவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்படும் என அவுஸ்ரேலிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.