செங்கல்பட்டு, மறைமலை நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர், குண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பிரமுகரான திருமாறன் என்பவரே, இந்தச் சட்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தமிழக காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்ற போதே, நேற்று பட்டப்பகலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, திருமாறனுக்கு பாதுகாப்பு அளித்த, காவல்துறை காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கொலையாளிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தப்பிச் சென்ற ஏனைய மூவரையும் கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.