அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு, ஜூன் 18-ம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் பொது செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சசிகலா சிறைக்குச் சென்றதை அடுத்து, 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா, தினகரன் தேர்ந்தெடுத்தக்கப்பட்டது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அரசியலில் இருந்து விலகிக் கொண்டதாக அறிவித்த பின்னரும், சசிகலா இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
சசிகலாவின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி விடுப்பில் இருந்த காரணத்தால் விசாரணையை ஜூன் 18-ஆம் நாளுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





