இந்திய எல்லைக்குள் ஊடுருவிய, பாகிஸ்தானின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா பறக்கும் கருவிகளை இந்தியப் படையினர் விரட்டியுள்ளனர்.
ஜகோவால் மற்றும் விக்ரம் ஆகிய எல்லைப் பகுதிகளில் இன்று அதிகாலை 4: 30 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
பாகிஸ்தானின் ட்ரோன் கருவிகள் ஊடுருவியதை அடுத்து, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர், 15 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, அவை பாகிஸ்தான் வான் எல்லைக்கு மீண்டும் திரும்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.