கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில்,
“கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த மனித இனத்திற்கே பொதுவான எதிரியாக உருவெடுத்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக போராட சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.
இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது எங்களுக்குத் தெரியும்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் மருந்து பொருட்களுக்கு தற்காலிகமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தேவையான ஆதரவையும், உதவிகளையும் வழங்க சீனா தயாராக உள்ளது. இது கொரோனாவை கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவும்.” என்று கூறியுள்ளார்