யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவரை விரட்டிச் சென்ற மூவர் கொண்ட குழு, ஆனைக்கோட்டை பகுதியில் அவரது உந்துருளியை தீயிட்டு எரித்துள்ளது.
ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண், நேற்று மாலை 6.45 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரைப் பின் தொடர்ந்து சென்று மூவர் வழிமறித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிக்க, குறித்த பெண், உந்துருளியை வீதியில் கைவிட்டு விட்டு வீடொன்றுக்குள் அடைக்கலம் தேடியுள்ளார்.
இதையடுத்தே அந்தக் குழுவினர், உந்துருளிக்கு தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.