ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (alexei navalny) இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
அவர் சமூக வலைத்தளப் பதிவில் இதுகுறித்து அறிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட மருத்துவரிடம் மருத்துவ உதவி கோரி மார்ச் 31 ஆம் நாள் தொடங்கிய உண்ணாவிரதத்தை 24 ஆவது நாளான இன்று முடிவுக்குக் கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
“நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள நல்ல மனிதர்களின் பெரும் ஆதரவுக்கு நன்றி, நாங்கள் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம்” என்று நவல்னி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உண்ணாவிரதத்தை தொடர்வது நவல்னியின் உயிருக்கு ஆபத்தானது என்று அவரது மருத்துவர்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.