இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றாளர் 36 பேர் ஒன்ராறியோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என மாகாண பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
B.1.617 என அழைக்கப்படும் இந்த உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பாதித்த தொற்றாளர்கள் ஒன்ராறியோவில் கடந்த சில நாட்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
ஒன்ராறியோ பொது சுகாதார அதிகாரிகளின் மரபணு கண்காணிப்பு திட்டத்தின் மூலம், சர்வதேச பயணங்களுடன் தொடர்புடைய, 6 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மேலும் 30 தொற்றாளர்கள், மாகாண விமான நிலையம் மற்றும் தரைவழி எல்லை கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட இதே வகையான உருமாற்றமடைந்த வைரஸ், தொற்றுடையவர்கள் அல்பேர்ட்டா மற்றும் கியூபெக்கிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.