ஒன்ராரியோவில் ஏழாவது நாளாகவும் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கணப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்பிராகரம் இன்றைய நாளில் இதுவரையில் 4ஆயிரத்து812 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேபோன்று மரணமானவர்களின் எண்ணிக்கை 34ஆக காணப்படுகின்றது.
கடந்த ஏழு நாட்களில் நாளொன்றில் சாரசரியாக நான்காயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.