ஒன்ராரியோவில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவருக்கு குருதி உறையும் நிலை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒன்னராரியோவில் இந்த நபரே இவ்வாறு குருதி உறையும் பக்கவிளைவுக்கு முகங்கொடுத்துள்ள முதலாவது நபராக பதிவாகியுள்ளார். அதேநேரம் கனடாவில் இதுவரையில் இவ்வாறான நான்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், குருதி உறைதலுக்கு முகங்கொடுத்துள்ள நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது