கொழும்பு துறைமுக நகரத்தில் சீனாவின் தலையீடு, சிறிலங்காவினதும், பிராந்தியத்தினதும் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், சீன வர்த்தக நலன்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு அனுமதிக்கும்.
சீனாவின் பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வருகை தருகின்றனர். பொருளாதார ஆணைக்குழு மூலம், துறைமுக நகரம் சீனாவின் கீழ் வரக் கூடும்.
சீனத் தலையீடு எமது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கும், பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும், ஆபத்தாக அமையும் வாய்ப்பு உள்ளது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.